முன்வினை பாவங்கள் நீக்கும் அஜ ஏகாதசி விரதம்!!!

முன்வினை பாவங்கள் நீக்கும் அஜ ஏகாதசி விரதம்!!! (22.8.2018) இன்றைய தினம் அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகாபாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார். முன்னொரு காலத்தில், பகவான்…

ஆடி மாதத்தின் சிறப்பு!!!

ஆடி மாதத்தின் சிறப்பு!!! தை முதல் ஆனி வரை உத்திராயன (வடதிசை) பயணம் செய்த சூரியன், தன் பயண திசையை தென்திசையில் துவக்கும் தட்சிணாயன புண்ணிய காலம் “ஆடி” மாதம்! ஆடி மாதத்தில்தான் பூமாதேவி, ஆண்டாளாக பூமியில் அவதரித்தாள் என்று புராணம் கூறுகிறது. ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி வனத்தில் ஆடிப்பூரத்தில் ஆண்டாள் அவதரித்தாள். ஆண்டாள் அவதரித்ததால் வைணவத் திருக்கோயிலில் ஆடிப்பூரம் ஒரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அம்மனுக்குரிய மாதம் என்று போற்றப்படும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளி மற்றும்…

சஞ்சலம் போக்கும் சக்கரத்தாழ்வார் விரதம்

சஞ்சலம் போக்கும் சக்கரத்தாழ்வார் விரதம் எதிரிக்கு எதிரியாக விளங்கி, பக்தர்களுக்கு சந்தோஷத்தை தரும் சக்கரத்தாழ்வாரை, அவரது ஜெயந்தி நாளில் விரதம் இருந்து வழிபட்டு பலமும் வளமும் பெறுவோமாக!!! மகாவிஷ்ணு தன்னுடைய நான்கு கரங்களிலும் சங்கு (பாஞ்சசன்யம்), சக்கரம் (சுதர்சனம்), கதை (கவுமோதகீ), வாள் (நந்தகம்) ஆகியவற்றையும், தோளில் வில்லையும் (சாரங்கம்) ஆயுதங்களாகத் தரித்திருப்பார். இந்த ஆயுதங்கள் அவர் இட்ட பணியை செய்யக்கூடிய சர்வ வல்லமை பொருந்தியவை. பன்னிரு ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் சக்கரத்தின் அம்சமாகவும், பொய்கையாழ்வார் சங்கின்…

மேல் மருவத்தூர் அம்பிகையின் 108 போற்றிகள்!!!

ஓம் ஓம்சக்தியே போற்றி ஓம் ஓம் ஓங்கார ஆனந்தியே போற்றி ஓம் ஓம் உலக நாயகியே போற்றி ஓம் ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி ஓம் ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி ஓம் ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி ஓம் ஓம் உண்மைப் பரம் பொருளே போற்றி ஓம் ஓம் உயிராய் நின்றவளே போற்றி ஓம் ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி ஓம் ஓம் மனமாசைத் துடைப்பாய் போற்றி ஓம் (10) ஓம் கவலை தவிர்ப்பாய்…

மதுரை மீனாட்சி அம்மன் 108 திருநாமங்கள்!!!

மதுரை மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் பிரார்த்தனைக்காக பதியப் பெற்றிருக்கும் அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்: ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி ஓம் அருமறையின் வரம்பே போற்றி ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி ஓம் அரசிளங்குமரியே போற்றி ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி ஓம் அமுதநாயகியே போற்றி ஓம் அருந்தவநாயகியே போற்றி ஓம் அருள் நிறை அம்மையே போற்றி ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி (10) ஓம் ஆறுமுகத்தின் அன்னையே…

வியாழன் குரு போற்றி!!!

ஓம் அன்ன வாகனனே போற்றி ஓம் அங்கிரஸ புத்ரனே போற்றி ஓம் அபய கரத்தனே போற்றி ஓம் அரசு சமித்தனே போற்றி ஓம் அயன் அதிதேவதையனே போற்றி ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி ஓம் அறிவனே போற்றி ஓம் அறிவுக்கதிபதியே போற்றி ஓம் அறக் காவலே போற்றி ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி ஓம் ஆண் கிரகமே போற்றி ஓம் ஆணவமழிப்பவனே போற்றி ஓம் இந்திரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி ஓம் இருவாகனனே போற்றி ஓம் ஈசனருள் பெற்றவனே…

தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு !!!

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் சரடானது பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும்கூட,…

பழையமுதும்…மாவடுவும்!!!

ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள் தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. பழைய சோறும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே…

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா? பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன? வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா? ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல. அது ஒரு மகத்தான நாள். இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள். தங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை பலர் உணரவேயில்லை. “நான் பிறந்த நாள் கொண்டாடுறதில்லை சார்… வயசு கூடிகிட்டு போறதை கொண்டாடனுமா? வேற வேலை இல்லை. பிறந்த நாளை கொண்டாடுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை…” இப்படிப்பட்ட வாதங்களை அடுக்குகின்றனர் ஒரு சாரார். மற்றொரு சாரார்……

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல். சிவராத்திரி விரத வகைகள் சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். 1. நித்திய சிவராத்திரி 2. மாத சிவராத்திரி 3. பட்ச சிவராத்திரி 4. யோக சிவராத்திரி 5. மகா சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் தேய்பிறை…

திருப்பாவை பாசுரம் – 30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். பொருள்: அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து,…

திருப்பாவை பாசுரம் – 29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். பொருள்: கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல்…