ஸ்ரீகோவிந்தன், விஷ்ணு, வெங்கடேஸ்வரன் பக்தி துதி!!!

ஆதி சேஷா அனந்தசயனா
ஸ்ரீனிவாசா ஸ்ரீவெங்கடேசா
ஸ்ரீவைகுண்டநாதா வைதேகிபிரியா
ஏழுமலை வாசா எங்களின் நேசா

(ஆதி சேஷா…).

வேணுவிலோலா விஜயகோபாலா
நீலமேகவண்ணா கார்மேகவண்ணா
காளிங்க நர்த்தன கமனீய கிருஷ்ணா
பரகதி அருள்வாய் பரந்தாமா கண்ணா

(ஆதி சேஷா…).

ஸ்ரீரெங்கநாதன் பள்ளிகொண்டிருக்கும்
ஸ்ரீரங்கம் சென்றே திருவடி தொழுதோம்
திருப்பதி மலைமேல் திருமுகம் காட்டும்
திருவேங்கடத்தான் திருவருள் பெறுவோம்

(ஆதி சேஷா…).

பாவங்கள் போக்க பஜனைகள் செய்வோம்
பார்த்தசாரதியின் பாதம் பணிவோம்
ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியை பாடு
தீவினையகல அவன் திருவடி நாடு

(ஆதி சேஷா…).

Advertisements