கடன் தொல்லை நீங்க எந்த பிள்ளையாரை வழிபடலாம்?

பிள்ளையார் பிடித்து வைத்து வணங்குவதன் பலன்கள்!!!

❇ பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுளாக திகழ்பவர் பிள்ளையார் அல்லது விநாயக பெருமான் ஆவார். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.

விநாயகரின் வேறு பெயர்கள் :

❇ கணபதி – கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.

❇ ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.

❇ கஜமுகன் – கஜம் என்றால் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.

❇ விக்னேஸ்வரன் – விக்கினங்களைத் தீர்க்கும்

❇ பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.

❇ ஒவ்வொரு சுப நிகழ்ச்சியின்போது பிள்ளையாரை ஏதோ ஒரு பொருளில் பிடித்து வைத்து வணங்குவதை காண்கிறோம்.

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள் :

❇ மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

❇ குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.

❇ புற்று மண்ணில் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும், விவசாயம் செழிக்கும்.

❇ வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.

❇ உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.

❇ வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூன்னியம் விலகும்.

❇ விபூதியால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

❇ சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

❇ சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.

❇ வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

❇ வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.

❇ சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

❇ பசுஞ்சாண விநாயகர் – நோய்களை நீக்குவார்.

❇ கல் விநாயகர் – வெற்றி தருவார்.

❇ புற்றுமண் விநாயகர் – வியாபாரத்தை பெருக வைப்பார்.

❇ மண் விநாயகர் – உயர் பதவிகள் கொடுப்பார்.

Advertisements