மேல் மருவத்தூர் அம்பிகையின் 108 போற்றிகள்!!!

ஓம் ஓம்சக்தியே போற்றி ஓம் ஓம் ஓங்கார ஆனந்தியே போற்றி ஓம் ஓம் உலக நாயகியே போற்றி ஓம் ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி ஓம் ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி ஓம் ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி ஓம் ஓம் உண்மைப் பரம் பொருளே போற்றி ஓம் ஓம் உயிராய் நின்றவளே போற்றி ஓம் ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி ஓம் ஓம் மனமாசைத் துடைப்பாய் போற்றி ஓம் (10) ஓம் கவலை தவிர்ப்பாய்…

மதுரை மீனாட்சி அம்மன் 108 திருநாமங்கள்!!!

மதுரை மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் பிரார்த்தனைக்காக பதியப் பெற்றிருக்கும் அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்: ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி ஓம் அருமறையின் வரம்பே போற்றி ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி ஓம் அரசிளங்குமரியே போற்றி ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி ஓம் அமுதநாயகியே போற்றி ஓம் அருந்தவநாயகியே போற்றி ஓம் அருள் நிறை அம்மையே போற்றி ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி (10) ஓம் ஆறுமுகத்தின் அன்னையே…

வியாழன் குரு போற்றி!!!

ஓம் அன்ன வாகனனே போற்றி ஓம் அங்கிரஸ புத்ரனே போற்றி ஓம் அபய கரத்தனே போற்றி ஓம் அரசு சமித்தனே போற்றி ஓம் அயன் அதிதேவதையனே போற்றி ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி ஓம் அறிவனே போற்றி ஓம் அறிவுக்கதிபதியே போற்றி ஓம் அறக் காவலே போற்றி ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி ஓம் ஆண் கிரகமே போற்றி ஓம் ஆணவமழிப்பவனே போற்றி ஓம் இந்திரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி ஓம் இருவாகனனே போற்றி ஓம் ஈசனருள் பெற்றவனே…

தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு !!!

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் சரடானது பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும்கூட,…

பழையமுதும்…மாவடுவும்!!!

ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள் தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. பழைய சோறும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே…