[108/108] – அருள்மிகு பரமபதநாதன் – பெரியபிராட்டியார்

[108/108] – அருள்மிகு பரமபதநாதன் – பெரியபிராட்டியார்  திருப்பரமபதம் அல்லது வைகுண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். வைணவ அடியவர்கள் கடைசி நிலையாகிய வீடுபேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலை எய்தி செல்லும் இடமாகும். 8 ஆழ்வார்களால் 36 பாசுரங்களில் பாடல் பெற்ற தலமாகும். வைணவ அடியார்கட்கு, இறைவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில்லை என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே வைணவர்களின் கடைசி இலக்காகும். இதனை திருநாடு என ஆழ்வார் பாசுரங்களில்…

[107/108] – அருள்மிகு ஷீராப்திநாதன் – கடலமகள் நாச்சியார் திருக்கோயில்

[107/108] – அருள்மிகு ஷீராப்திநாதன் – கடலமகள் நாச்சியார் திருக்கோயில் திருப்பாற்கடல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பத்து ஆழ்வார்களால் பாடல்பெற்ற இத்தலம் இப்பூமியில் இல்லாத தலமாகும். இந்து தொன்மவியலில் பாற்கடல் என்பது திருமாலின் இருப்பிடமாக கூறப்படுகிறது. இந்த பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்பு படுக்கையில் திருமால் படுத்துக் கொண்டிருப்பதாக திருமுறைகள் குறிப்பிடுகின்றன. இறைவன் இங்கு இறைவன் பாற்கடல் வண்ணனாக (சீராப்திநாதன்)பாம்பணை மேல் தெற்கு நோக்கிய சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறான். இறைவி கடல்மகள் நாச்சியார், பூமாதேவி…

[106/108] – அருள்மிகு நவமோகன கிருஷ்ணன் – ருக்மணி, சத்யபாமா திருக்கோயில்

[106/108] – அருள்மிகு நவமோகன கிருஷ்ணன் – ருக்மணி, சத்யபாமா திருக்கோயில் ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரால் பாடல்பெற்ற தலம் இதுவாகும். இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது. தல வரலாறு இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம்…

[105/108] – அருள்மிகு கோவர்த்தநேசன் திருக்கோயில்

[105/108] – அருள்மிகு கோவர்த்தநேசன் திருக்கோயில் மதுரா (Mathura, இந்தி: मथुरा, தமிழிலக்கிய பெயர்: வடமதுரை) இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஓர் மாநகரமாகும். ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன. இது மதுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராகவும் உள்ளது. முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான மதுரா, இந்து தொன்மவியல் கூற்றுக்களின்படி கிருட்டினனின்…

[104/108] – அருள்மிகு கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில்

[104/108] – அருள்மிகு கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில் துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்,திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்றதாகும். இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது. மூலவர்: கிருஷ்ணர் துவராகாநாதர்(துவாரகீஷ்) அம்மன்/தாயார்: பாமா, ருக்மணி,…

[103/108] – அருள்மிகு நீலமேகம் – புண்டரீகவல்லி திருக்கோயில்

[103/108] – அருள்மிகு நீலமேகம் – புண்டரீகவல்லி திருக்கோயில் திருப்பிரிதி என்பது என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் தனது தொடக்கப் பாடலாக இத்தலத்தையேப் பாடுகிறார். இத்தலம் எங்கு அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷி மடம் என்றும் கருதப்படுகிறது. இந்த இடத்தில் தற்போது கோவில்களும்,…

[102/108] – அருள்மிகு நீலமேகம் – புண்டரீகவல்லி திருக்கோயில்

[102/108] – அருள்மிகு நீலமேகம் – புண்டரீகவல்லி திருக்கோயில் தேவப்பிரயாகை (Devprayag) அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வாரால்பாடல் பெற்ற இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ரிஷி கேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தல வரலாறு தேவப்பிரயாகையின் சிறப்பை பற்றி பாத்மபுராணம், மத்ஸயபுராணம், கூர்மபுராணம் அக்னிபுராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மிகச் சிறந்த யாகத்தை…

[101/108] – அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்

[101/108] – அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில் பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம்…

[100/108] – அருள்மிகு ஸ்ரீமூர்த்தி – ஸ்ரீதேவி திருக்கோயில்

[100/108] – அருள்மிகு ஸ்ரீமூர்த்தி – ஸ்ரீதேவி திருக்கோயில் முக்திநாத் (Muktinath), நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும். வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற…

[99/108] – அருள்மிகு தேவராஜன் – ஹரிலட்சுமி திருக்கோயில்

[99/108] – அருள்மிகு தேவராஜன் – ஹரிலட்சுமி திருக்கோயில் நைமிசாரண்யம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி. மி., தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தான் உக்கிரசிரவஸ் என்ற சூத பௌராணிகர், மகாபாரத இதிகாசத்தை குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். தல வரலாறு இந்துத் தொன்மத்தின்படி ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள்…

[98/108] – அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில்

[98/108] – அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில் அயோத்தி (Ayodhya), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள பைசாபாத மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி பேராயம் ஆகும். ராமர் பிறந்த இடம் ராம ஜென்மபூமி அயோத்தியில் அமைந்துள்ளது. இந்நகரம் சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சமசுகிருதம் – பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது. அயோத்தி நகரம், பண்டைய கோசல நாட்டின் தலைநகரம் ஆகும். மூலவர்: ரகுநாயகன் (ராமர்) அம்மன்/தாயார்: சீதை தீர்த்தம்: சரயு நதி பழமை:…

[97/108] – அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில்

[97/108] – அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில் அகோபிலம் என்ற திவ்ய தேசம் ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. “அஹோ’ என்றால் “சிங்கம்’. “பிலம்’ என்றால் “குகை’. மூலவர்: மலை அடிவாரக்கோயில்: பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன். மலைக்கோயில்:அஹோபில நரசிம்மர் உற்சவர்: மலையின் மேலும் மலையின் கீழுமாக மொத்தம் 9 உற்சவ மூர்த்திகள். அம்மன்/தாயார்: மலை அடிவாரக்கோயில்: அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி. மலைக்கோயில்: லட்சுமி தீர்த்தம்: மலை அடிவாரக்கோயில்: இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம் தீர்த்தம்,…