கார்த்திகை மாத சோமவார விரதம் கடைபிடிப்பது ஏன் தெரியுமா?

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம…

பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பது ஏன்?

பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பது ஏன்? சடாரி வைப்பதன் தத்துவம்!!! சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள். தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற, மரவுரி தரித்து வனவாசம் சென்றார் ஸ்ரீராமன். அப்போது பிரிய மனமில்லாத தன் மனைவி மற்றும் லட்சுமணன் உடன் சென்றனர். தசரதன், தான்…

கணபதி ஹோமமும் அதன் பயன்களும்!!!

கணபதி ஹோமமும் அதன் பயன்களும்!!! கணபதி ஹோமம்: கணபதி ஹோமம் என்பது முதற்கடவுளாகிய விநாயகருக்கு செய்யும் ஹோமம் ஆகும். இந்த கணபதி ஹோமம் செய்வதால் விநாயகர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். கணபதி ஹோமத்தால் கிடைக்கும் பயன்: இந்த ஹோமனத்தினை மேற்கொள்பவர்கள் வாழ்வில் எந்த தடையும் இல்லாமல் நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வர் . மேலும் இந்த ஹோமத்தினால் விநாயகர் அருள் கிட்டி சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம். எப்போது செய்வது: இந்த கணபதி ஹோமம்…

வைகாசி விசாகம்

🙏 வைகாசி விசாகம் 🙏 7-ஜூன்-2017 விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்தது. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். எந்த சக்தியாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்த சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் தேவர்களுக்கு துன்பம் நேர்ந்தது. பல ஆண்டுகாலமாக துன்பங்களை அனுபவித்த தேவர்கள், சிவ பெருமானை நோக்கி தவம் இருந்தனர்….

பெருமாளுக்கு சனிக்கிழமையில் விரதம் இருப்பது ஏன்?

பெருமாளுக்கு சனிக்கிழமையில் விரதம் இருப்பது ஏன்? ✦ செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருகிறது சனிக்கிழமை விரதம். நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று.