[58/108] – அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) திருக்கோயில்

[58/108] – அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) திருக்கோயில் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் நிசேபவித்தன், வைத்தமா நிதிப்பெருமான். இறைவி: குமுதவல்லி, கோளுர் வள்ளி. தீர்த்தம்: குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்(தாமிரபரணி)….

[56/108] – அருள்மிகு வேங்கட வாணன் (நவதிருப்பதி- 7) திருக்கோயில்

[56/108] – அருள்மிகு வேங்கட வாணன் (நவதிருப்பதி- 7) திருக்கோயில் பெருங்குளம் பெருமாள் கோவில் என்றழைக்கப்படும் திருக்குளந்தை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருப்புளிங்குடியிலிருந்து சுமார் 6 மைல் தொலைவிலும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சுமார் 7 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கி நின்ற நிலையில் சோர நாதன்(மாயக்கூத்தன்), ஸ்ரீனிவாஸன் என்று பெயர்கள் உண்டு. இறைவி: குளந்தை வல்லித்தாயார் (கமலாதேவி), அலமேலு மங்கைத் தாயார். தீர்த்தம்: பெருங்குளம். விமானம்:ஆனந்த நிலய…

[55/108] – அருள்மிகு விஜயாஸனர் (நவதிருப்பதி-2) திருக்கோயில்

[55/108] – அருள்மிகு விஜயாஸனர் (நவதிருப்பதி-2) திருக்கோயில் நத்தம் என்றழைக்கப்படும் திருவரகுணமங்கை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இறைவர்: கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் ஆதிசேடனால் குடை பிடிக்கப்பட்ட விஜயாசனப் பெருமாள். இறைவி: வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார். தீர்த்தம்: அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியன: இதன் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சேர்ந்தது. இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும்…

[54/108] – அருள்மிகு வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1) திருக்கோயில்

[54/108] – அருள்மிகு வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1) திருக்கோயில் வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது. 9 நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டுள்ளது இக்கோவிலின் ராஜகோபுரம். மூலவர் வைகுண்டநாதர்; கோவிலுக்குள் இவர் சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் வைகுண்டநாச்சியார்….

[53/108] – அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6) திருக்கோயில்

[53/108] – அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6) திருக்கோயில் திருப்பேரை அல்லது தென்திருப்பேரை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில்…

[52/108] – அருள்மிகு பூமிபாலகர் (நவதிருப்பதி-4) திருக்கோயில்

[52/108] -அருள்மிகு பூமிபாலகர் (நவதிருப்பதி-4) திருக்கோயில் திருப்புளிங்குடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது. இத்தல இறைவன் காய்சின வேந்தர் (காசினி வேந்தர்), பூமிபாலர் என்ற பெயர்களில் பள்ளி கொண்ட நிலையில் கிழக்கு நோக்கிய கோலத்துடன் காணப்படுகிறார். இறைவியின் பெயர் மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி; தீர்த்தம் இந்திர…

[50/108] – அருள்மிகு அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில்

[50/108] – அருள்மிகு அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில் திருத்துலைவில்லி மங்கலம் (திருத்தொலைவில்லிமங்களம், இரட்டை திருப்பதி)108 வைணவத் திருத்தலத்தில் ஒரு திவ்ய தேசம். இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மூலவர்: அரவிந்த லோசனர் உற்சவர்: செந்தாமரைக் கண்ணன் அம்மன்/தாயார்: கருந்தடங்கண்ணி தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், வருண தீர்த்தம் பழமை: 1000-2000…

[49/108] – ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் (நவதிருப்பதி- 5) திருக்கோயில்

[49/108] – ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் (நவதிருப்பதி- 5) திருக்கோயில் ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். மூலவர்: ஆதிநாதன், ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம் உற்சவர்: பொலிந்து நின்ற பிரான் அம்மன்/தாயார்: ஆதிநாதவல்லி,…